-422 பேர் உயிரிழப்பு-
நாடளாவிய ரீதியில கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் மார்ச் 02 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில்; 3,600க்கும் மேற்பட்ட வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதிவான விபத்துக்களில் 405 சம்பவங்கள் மிக மோசமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இவற்றின் காரணமாக 422 பேர் உயிரிழந்தனர்.
அத்துடன், 866 விபத்துக்கள் பாரதூரமானவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 1,730 விபத்துக்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
641 விபத்துச் சம்பவங்களில் வாகனங்கள் மற்றும் ஏனைய உடமைகளுக்குச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
எனவே, வீதி விபத்துக்களைக் குறைப்பதற்கும் மனித உயிர்களைப் பாதுகாப்பதற்கும் வீதி ஒழுங்குமுறைகளையும், பாதுகாப்பு நடைமுறைகளையும் முறையாகப் பின்பற்றுமாறு பொலிஸ் அதிகாரிகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.


















