இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகில் இருந்து இலங்கைக்குக் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வலி நிவாரணி மற்றும் வெளிநாட்டு மாத்திரைகளை க்யூ பிரிவு மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் நேற்று புதன்கிழமை அதிகாலை பறிமுதல் செய்தனர்.
20,400 வலி நிவாரணி மாத்திரைகள், 4,800 வெளிநாட்டு வயாகரா மாத்திரைகள் மற்றும் அழகு சாதனப் பொருட்கள் ஆகியனவே கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட பொருட்களின் இந்திய மதிப்பில் 10 இலட்சமாகும்.
கடத்தலுக்குப் பயன்படுத்தத் தயார் நிலையில் இருந்த ஒரு படகு மற்றும் இரண்டு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டன.
அதிகாரிகள் வருவதைக் கண்ட கடத்தல்காரர்கள் தப்பியோடியுள்ளனர். தப்பியோடிய மர்ம நபர்களை அதிகாரிகள் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
















