இலங்கைக்கு 100 அதிநவீன மின்சார பேருந்துகளை வழங்க சீனா நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி ஷென் ஹொங் கூறியுள்ளார்.
எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாரிய சுற்றுச்சூழல் மாசடைவைக் குறைக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வழங்கப்படவுள்ள பேருந்துகளில் ஒரு பேருந்தின் விலை சுமார் 22,5000 அமெரிக்க டொலர் எனவும் சீனத் தூதுவர் தெரிவித்துள்ளார்.
மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரர் மற்றும் அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரர் ஆகியோரை நேற்று சந்தித்து ஆசி பெற்றபோதே சீனத் தூதுவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.


















