சித்திரவதை தடுப்புக்கான ஐ.நா. துணைக்குழு பயணம் செய்யவுள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
SPT-யின் படி, அடுத்த ஆண்டு திட்டத்தில் ஆறு பயணங்கள் இடம்பெறும், அவற்றில் மூன்று 2025ம் ஆண்டில் மேற்கொள்ளவிருந்து, பின்னர் தடைப்பட்ட பயணங்கள் எனவும், 2026ம் ஆண்டுக்கான தீர்மானிக்கபட்ட பயணங்கள் பராகுவே, ருவாண்டா, இலங்கை ஆகிய நாடுகளுக்கானது என ஐ.நா. தெரிவித்துள்ளது.
உலகளவில் சித்திரவதைக்கு எதிரான பாதுகாப்புகளை வலுப்படுத்துவதில் மாநிலங்கள் மற்றும் தேசிய கண்காணிப்பு அமைப்புகளுடன் நேரடி ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை SPT-தலைவர் மரியா லூயிசா ரோமெரோ வலியுறுத்தியுள்ளார்.


















