இயற்கையின் சீற்றத்தால் பாதிப்புற்ற இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு மாலைதீவும் முன்வந்துள்ளது ஏற்கனவே அமெரிக்கா, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உதவியுள்ளன. இந்நிலையில் 50,000 அமெரிக்க டொலரையும் 25,000 டுனா ரின்மீன்களையும் நன்கொடையாக வழங்கவுள்ளதாக மாலைதீவின் வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூறாவளியால் ஏற்பட்ட பரவலான பேரழிவை எதிர்கொள்ளும் வகையில்,மாலைதீவு மக்கள் சார்பாக மனிதாபிமான மற்றும் நிவாரண உதவிகளை இலங்கை மக்களுக்கு வழங்குவதற்காக மாலைத்தீவு அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் இலங்கை அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு மேலும் வலுவூட்டும் என்றும் மாலைதீவு தெரிவித்துள்ளது.


















