-சீனத் தூதுவர்-
நாட்டின் கடலோர மையங்களாக மேம்பட்டுவரும் கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டா துறைமுகம் என்பன நாட்டின் வருவாய்க்கு புதிய சக்தியை அளித்து வருவதாக இலங்கை;கான சீனத் தூதுவர் குய் ஜென்ஹோங் தெரிவித்தார்.
சீனப் புத்தாண்டைக் குறிக்கும் வகையில் கொழும்பிலுள்ள சீனத் தூதரகம் நடத்திய வரவேற்பு நிகழ்ச்சியில் சீனத் தூதுவர் உரையாற்றுகையிலேயே மேற்கண்ட்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.


















