இலங்கையில் கடந்த 5 வருடங்களில் 116167 விபத்துகள் இடம்பெற்றுள்ள நிலையில், 247 இழப்பீட்டு விண்ணப்பங்கள் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டதாக தேசிய வீதிப் பாதுகாப்பு கவுன்சிலின் தெரிவித்துள்ளது.
இழப்பீட்டுத் திட்டம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இல்லாததால், அவர்கள் நிதி உதவி பெறாமல் தவிக்கிறார்கள். பொலிஸ் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தகவல் வழங்குவதற்கு, அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதற்கும் மேல் இந்த வருடம் விபத்து இழப்பீடு தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இழப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மரணம் ஏற்பட்டால் ரூ.250,000 மற்றும் வாகனம் அடையாளம் காண முடியாத நிலையில், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.150,000 வழங்கப்படுகிறது.
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆறு மாதங்களுக்குள் தங்கள் கோரிக்கைகளை காவல்த்துறை மற்றும் மருத்துவ ஆவணங்களுடன், பிரதேச செயலாளரால் சான்றளிக்கப்பட்டு, கொழும்பில் உள்ள NCRS – க்கு அனுப்ப வேண்டும். புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஐந்து ஆண்டுகளில் 116,167 சாலை விபத்துக்;கள் நிகழ்ந்துள்ளன,
இதன் விளைவாக தோராயமாக 12,149 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், சாலை பாதுகாப்பு மேலாண்மை திட்டங்களுக்காக கவுன்சில் ரூ.64.5 மில்லியனை செலவிட்டுள்ளது
இருப்பினும், அந்தக் காலகட்டத்தில் விபத்துகள் அல்லது இறப்புகளில் அளவிடக்கூடிய சரிவு எதுவுமில்லை. அதிகரித்துவரும் விபத்துகளின் எண்ணிக்கைக்கு ஏராளமான, வெளிப்புறக் காரணிகள் பங்களிக்கிறது. தீவு முழுவதும் சாலைப் பாதுகாப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தணிக்கை பரிந்துரைக்கிறது.


















