-நாமே தாக்கி அழித்தோம் – அமெரிக்கா-
-இலங்கை கடற்படையால் 32 பேர் மீட்கப்பட்டனர்-
-தொடர் மீட்பு பணிகளில் 87 சடலங்கள் மீட்கப்பட்டன-
இலங்கையை அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் பயணித்த ஈரான் கடற்படைக்கு சொந்தமான ‘ஐசுஐளு னுநயெ’ போர்க்கப்பலை தாங்களே தாக்கி அழித்ததாக அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் நேற்றுமாலை உத்தியோகபூர்வமான அறிவித்துள்ளார்.
இலங்கைக்கு தெற்கே 40 கடல் மைல் தொலைவில் ஈரான் கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலில் இருந்து இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு அவசர உதவிக்கோரிக்கை நேற்று அதிகாலை 5.08 மணிக்கு விடுக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, இலங்கை கடற்படையின் இரு போர்க்கப்பல்கள் மற்றும் விமானப்படையின் உலங்குவானூர்திகள் அங்கு அனுப்பப்பட்டிருந்த நிலையில், கடலில் மிதந்த சுமார் 32 பேர் உயிருடன் மீட்கப்பட்டு காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில், சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை கடற்படையினர் மேற்கொண்டிருந்த தொடர்ச்சியான தேடுதல் நடவடிக்கையில் சுமார் 87 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறியுள்ள வெளிவிவகார அமைச்சர், விஜித ஹேரத், 1979 ஆம் ஆண்டின் ‘சர்வதேச கடல்சார் தேடல் மற்றும் மீட்பு’ உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளமைக்கு அமைவாக இந்த மீட்பு பணியை மேற்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதேவேளை, மேற்படி கடற்படை கப்பலில், சுமார் 180 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், சுமார் 60 பேர்வரையில் நீரில் முழ்கி காணாமல்போயிருக்கலாம் என கருதப்படுகின்றது. எனினும், இலங்கை மனிதாபிமான மீட்பு படையினரின் மீட்பு பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருவதாக கூறப்படுகிறது.
இதேவேளை, முன்னதாக இந்த சம்பவம் ஒரு விபத்தாக கருதப்பட்ட நிலையில், நேற்று மாலை அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட்டர் ஹெக்செத் ஈரான் கடற்படை கப்பலை அமெரிக்க கடற்படையின் நீர் மூழ்கி கப்பலில் இருந்து எவப்பட்ட நீரடி எவுகணை மூலம், தாக்கி அழித்ததாகவும், இது 2ம் உலகப்போருக்கு பின்னர் சர்வதேச கடலில் நீரடி எவுகணை மூலம் இடம்பெற்ற முதலாவது தாக்குதல் சம்பவம் எனவும் விபரித்தார். தாக்குதலுக்கு இலக்கான கப்பல் இந்தியாவின் விசாகப்பட்டினத்தில் இடம்பெற்ற 2026ம் ஆண்டு, சர்வதேச கடற்படை மதிப்பாய்வில் கலந்துகொண்டுவிட்டு நாடு திரும்பியது என கூறப்படுகிறது.
















