-உதவி வழங்க பல நாடுகள் இணக்கம்-
டித்வா புயலினால் பேரழிவை சந்தித்துள்ள நாட்டை மீட்பதற்கு சுமார் 31 பில்லியன் ரூபாய் தேவை என அரசாங்கம் உத்தேசித்துள்ளது.
புயல் காரணமாக நாட்டின் மூன்றில் ஒரு பகுதி முற்காக சேதமடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இலங்கை தொடர்பில் கவலையை வெளிப்படுத்தியுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா, இலங்கையின் மீட்சிக்கும் மீளெழுச்சிக்கும் அவசியமான ஆதரவை வழங்குவதற்குச் சர்வதேச நாணய நிதியம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார்.
இதனிடையே இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு இந்தியா, அமெரிக்கா, அவுஸ்ரேலியா, பிரிட்டன், மாலைதீவுகள், சீனா உள்ளிட்ட நாடுகள், முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
















