பெண்கள் மற்றும் பொதுமக்களை பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட இலங்கையில் செல்வாக்கு மிக்க நபர் ஒருவர் கனடாவின் டொராண்டோ நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டார்.
45 வயதான முகமது அஸ்கர் முகமது-ராசிக் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் கனடா முழுவதும் பலமுறை மக்களை சங்கடப்படுத்தும் வகையில் பொது இடங்களில் அணுகி காணொளியாக பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் கடந்த டிசம்பர் 10 ஆம் திகதி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், குற்றம் சாட்டப்பட்டவரின் படத்தையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் தகவல் அளிக்கு முன்வருமாறு விசாரணையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.















