இலங்கை மின்சாரச் சட்டத்தின் கீழ், மின் உற்பத்தி, மின் கடத்துகை மற்றும் விநியோகப் பணிகளை மறுசீரமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இலங்கை மின்சார சபையின் சொத்துகள், பொறுப்புக்கள் மற்றும் ஊழியர்களை அதன் துணை நிறுவனங்களுக்கு முறைப்படி ஒப்படைக்கும் ‘ஆரம்ப கைமாற்றல் திட்டத்திற்கு’ அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மின்னுற்பத்தி, மின்மாற்றம், மின் விநியோகம் மற்றும் பங்கீடு போன்றவற்றை மீள்கட்டமைத்தல் பணிகளை ஒப்படைப்பதற்கான அனைத்து தகவல்கள் மற்றும் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்காக துணைக் கம்பனிகளுக்குத் தேவையான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்களை ஒப்படைப்பதற்கான நிதித்திட்டம் குறித்த ஆரம்ப கைமாற்றல் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, இலங்கை மின்சார சபையின் சொத்துக்கள், பொறுப்புக்கள், பணிகள், பணிப் பொறுப்புக்கள் மற்றும் நடவடிக்கைகளுக்காக இலங்கை மின்சார சபை துணைக் கம்பனிகளுக்கு ஒப்படைப்பதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


















