வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ட்ரோன்களைப் பறக்க விடுவதை தவிர்க்குமாறு இலங்கை விமானப்படை பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
கட்டுபாடுகள் இன்றி ட்ரோன்களை பறக்கவிடுவதனால் முக்கியமான மீட்பு விமானங்களுக்கு ஆபத்தை விளைவிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எனவே, ட்ரோக்களை பயன்படுத்துவது தொடர்பாக 011-2343970, 011-2343971 அல்லது 115 அவசர இலக்கங்கள் ஊடாக முன்கூட்டியே தெரிவிக்குமாறு விமானப்படை கேட்டுக் கொண்டுள்ளது.
















