திருகோணமலை – தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் 24 வயதுடைய, ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபரின் சடலம் கந்தளாய் வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


















