-சி.ஜெகதீஸ்வரன்-
வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு இருந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் திடீர் என உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் ஆலடி உடுவிலைச் சேர்ந்த தேவதாஸ் நிமலதாஸ் (வயது-41) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
திங்கட்கிழமை பிற்பகல் திடீரென மூச்சுவிட சிரமப்பட்டு மயங்கி உயிரிழந்தார்.
இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு உத்தரவிட்டார். சாட்சிகளை மானிப்பாய் பொலிசார் நெறிப்படுத்தினர்.


















