-சு.பாஸ்கரன்-
கிளிநொச்சி, அக்கராயன்குளம் பகுதியில் நேற்று அதிகாலை இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யபட்டுள்ளார்.
கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் இருவருக்கிடையில் கசிப்பு வியாபாரம் தொடர்பான தகராற்றினால் இந்தக் கொலை நடந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. கொலையை செய்ததாக சந்தேகிக்கப்படும் நபர் தலைமறைவாகியுள்ளார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த கஜன் (வயது-24) என்பவரே வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.
கொல்லப்பட்டவரும், சந்தேகநபரும் குற்றப் பின்னணியுடையவர்கள்.
இச் சம்பவம் தொடர்பில் அக்கராயன் குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த பகுதியில் ஏற்கனவே சட்டவிரோத கசிப்பு உற்பத்தி விற்பனைகளை கட்டுப்படுத்துமாறு கோரி 65 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கையொப்பமிட்ட மகஜர்களை கையளித்திருந்த போதும் இது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்றும் பிரதேச மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


















