2026 ஆம் ஆண்டுக்கான 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில இலங்கை ஜப்பான் அணியை 203 ஓட்டங்களால் வெற்றியிட்டியது.
இலங்கை – ஜப்பான் அணிகள் மோதிய போட்டி நமீபியாவின் விண்ட்ஹோக் மைதானத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்றது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்பான் அணி, முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அபாரமாக ஆடி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 387 ஓட்டங்களைப் பெற்றது.
ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான விரான் சாமுதித்த – திமந்த மஹாவிதான ஆகிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 328 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர். இது இளையோர் ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் விக்கெட் ஒன்றுக்கு பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாக பதிவாகியது.
விரான் சாமுதித்த 192 ஓட்டங்களையும் மறுமுனையில் திமந்த மஹாவிதானவும் 115 ஓட்டங்களைப் பெற்றனர்.
பின்னர் அணியின் தலைவர் விமத் டின்சார 44 ஓட்டங்கள் எடுத்தார்.
ஜப்பான் அணி சார்பில் திமோதி மூரே 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
பின்னர், 388 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பாடிய ஜப்பான் அணி 45.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 184 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டையும் இழந்தது.
ஜப்பான் துடுப்பாட்டத்தில் ஹியூகோ கெல்லி சதம் கடந்து 101 ஓட்டங்கள் பெற்றார். போட்டியின் ஆட்டநாயகனாக விரான் சாமுதித்த தெரிவு செய்யப்பட்டார்.


















