-பலர் வைத்தியசாலையில்-
கொஸ்கம பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை காலை இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரத்தினபுரியிலிருந்து பத்தரமுல்லை நோக்கி மின்சார சபை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பஸ்ஸானது வீதியை விட்டு விலகி அருகிலிருந்த கால்வாயில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் கொஸ்கம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


















