அரசாங்கம் ஈரானிய கப்பலுக்கு உதவி வழங்காவிட்டாலும், காட்டிக் கொடுக்காமல் இருந்திருக்கலாம் என வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டு மேலும் தெரிவிக்கையில்,
ஈரானிய கடற்படையினர் உயிரிழந்தமைக்கு காரணமாக எமது அரசாங்கம் இருக்கின்றமை கவலைக்குரிய விடயமாகும். 11 மணித்தியாலங்கள் அவர்கள் உதவி கோரியிருக்கின்றனர். இருப்பினும் அரசாங்கம் அவர்களுக்கு உதவி வழங்கவில்லை.
உதவி வழங்காவிட்டாலும் பரவாயில்லை காட்டிக் கொடுக்காமல் இருந்திருக்கலாம். உண்மையிலே இது ஒரு வேதனைக்குரிய விடயமாகும். அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் வெறி பிடித்து அலைகின்றன.
எமது அரசாங்கம் கிட்டத்தட்ட 100 ஈரானிய கடற்படையினர் இறந்ததற்கு காரணம் என்பதால் கொலைக்குரிய காரண கர்த்தாக்களாக இருக்கின்றது என்பதை நினைக்கும் போது வேதனையாக உள்ளது என்றார்.


















