இலங்கைக்கான ஈரான் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஈரான் தூதரகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் குறித்தும், ஈரான் மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.


















