ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன, ஆனால் அது படுகொலைக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணரப்படுவதை தடுக்காது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று நாடாளுமன்றில் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் ஜனாதிபதி கூறுகையில், முக்கிய அறிக்கைகளின் பக்கங்கள் கிழித்தெறியப்பட்டுள்ளன. ஆனால் அரசாங்கம் ஏற்கனவே புதிய ஆதாரங்களை சேகரிக்கத் தொடங்கியுள்ளது. ஆதாரங்கள் அழிக்கப்பட்டாலும் உண்மையை நாங்கள் வெளிக்கொணர்வோம்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள உண்மையை வெளிக்கொணர, சி.ஐ.டி தலைவர் ஷhனி அபேசேகர மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன ஆகியோர் இரவும் பகலும் உழைத்து வருகின்றனர். அவர்கள் விரைவில், உண்மையை வெளிப்படுத்துவார்கள், என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.


















