-உறுதிமொழி வழங்கிய அநுர அரசாங்கம்-
ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, விரைவில் நீதி பெற்றுக் கொடுக்கப்படும் என்று அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இந்த உறுதிமொழியினை வழங்கியுள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, இத்தாக்குதலை தடுக்க தவறியவர்கள், இந்த தாக்குதலை வழிநடத்தியவர்கள் மற்றும் இந்த தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் என்ற ரீதியில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
விசாரணைகளுக்கு அமைய, சந்தேகநபர்கள் கைது செய்யப்படுவதாகவும், வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்படுவதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அத்துடன், சில நபர்கள் வெளிநாடுகளில் இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அதற்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களம் உரிய விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதாக, அவர் தெரிவித்தார்.
எனினும், எதிர்வரும் ஏப்ரல் 21ற்கு முன்னதாக நீதியை வழங்க முடியாவிட்டாலும், விரைவில் இதற்கான நீதியைப் பெற்றுக் கொடுப்பதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.


















