டித்வா புயல் பேரிடரினால் மரக்கறி செய்கை மோசமாக சேதமடைந்துள்ள நிலையில் மரக்கறி விலைகள் வியக்கத்தக்க வகையில் அதிகரித்துள்ளது.
விநியோகம் குறைந்துவிட்டதால், உள்ளூர் விற்பனையாளர்கள் விலைகளை கடுமையாக உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகள், சில விற்பனையாளர்கள் பின்வரும் விலைகளைக் கோருவதைக் காட்டுகின்றன,
லீக்ஸ் (1கிலோ): ரூ.2,800
கத்திரிக்காய் (1 கிலோ): ரூ.800
முள்ளங்கி (1 கிலோ): ரூ.400
கரட் (1 கிலோ): ரூ.2,800
பச்சை மிளகாய் (1 கிலோ): ரூ.3,000
இதற்கிடையில், பல்பொருள் அங்காடிகள் மற்றும் மளிகைக் கடைகளில் பீதி கொள்முதல் தொடர்கிறது இது விலைகளை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
















