-த.அம்பிகாவதி-
நீண்டகாலமாக புனரமைப்பு செய்யப்படாத நிலையில் , மக்கள் போக்குவரத்துச் செய்வதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாயிருந்த உடுத்துறை பிரதான குடியிருப்பு வீதி விரைவில் காப்பெற் வீதியாக புனரமைப்பு செய்யப்படவுள்ளது.
இதற்கான ஆரம்ப கட்ட அளவீட்டுப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. உலகவங்கியின் நிதி ஒதுக்கீட்டில்
கொடுக்குளாய் – இயக்கச்சி அபாய வெளியேற்றப்பாதை காப்பெற் வீதியாக அமைக்கும் வேலைத்திட்டத்தின் தொடர்ச்சியாகவே மேற்படி வேலைத்திட்டமும் இடம்பெறவுள்ளது.
2010 ஆம் ஆண்டு மீள்குடியமர்வு இடம்பெற்ற காலப்பகுதியில் இவ்வீதி ஓரளவு புனரமைப்பு செய்யப்பட்ட போதிலும், சீரான முறையில் இவ்வேலைத் திட்டம் இடம்பெறாமையினால் குறுகிய காலத்திலேயே வீதி பழுதடைந்து குண்டும் குழியுமாக இருப்பதனால் இதனைப் புனமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் பலதடவைகள் உரிய தரப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.















