முல்லைத்தீவு – உடையார்கட்டு மகாவித்தியாலயத்தின் குடிநீர் இணைப்பினை வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் 300,000ரூபாய் நிதியில் விரிவுபடுத்திக்கொடுத்துள்ளார்.
அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக கடந்த 10.03.2026அன்று உடையார்கட்டு மகாவித்தியாலயத்திற்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், பாடசாலையில் உள்ள குறைபாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகோண்டார். இதன்போது பாடசாலைச் சமூகத்தினரால் குடிநீர் இணைப்பை விரிவுபடுத்தித் தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தனது 2026ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீடிலிருந்து 300,000ரூபாயில் உடையார்கட்டு மகாவித்தியாலயத்தின் குடிநீர் இணைப்பினை விரிவுபடுத்திக் கொடுத்துள்ளார்.
அந்தவகையில் விரிவுபடுத்தப்பட்ட குடிநீர் இணைப்பினை பாடசாலைச் சமூகத்தினரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலை முதல்வர் சிவானந்தம் ஏகாம்பரம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் சு.வளர்மதி, பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















