ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பட்டதாரிகளுடன் கலந்துரையாடல் நடத்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முடிவு செய்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடல் எதிர்வரும் 3 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்கு இடம்பெறவுள்ளது. ஜனாதிபதியின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகே, கலந்துரையாடல் தொடர்பில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
பாடசாலைகளில் பயிற்சி பெற்ற இந்தப் பட்டதாரிகள் தங்கள் சேவைகளை நிரந்தரமாக்கக் கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


















