-செ.ரவிசாந்-
இவ்வருடம் பரீட்சைக்குத் தோற்றவுள்ள உயர்தர மாணவர்களுக்கான தமிழ்மொழிப் பாடச் செயலமர்வு நேற்று முன்தினம் புதன்கிழமை வெண்கரம் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் பூநகரிப் பிரதேச சபை நூலகத்தின் அனுசரணையில் நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.
குறித்த செயலமர்வில் வெண்கரம் அறக்கட்டளையின் பிரதான செயற்பாட்டாளர் திருமதி சு.சண்முகேந்திரன் வளவாளராகக் கலந்துகொண்டார்.
இதன்போது மாதிரி வினாத்தாள்கள் வழங்கப்பட்டு, குழு நிலையில் செயற்பட மாணவர்கள் வழிப்படுத்தப்பட்டனர்.

இந் நிகழ்வில் வெண்கரம் அறக்கட்டளையின் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகன், பூநகரிப் பிரதேச சபையின் தவிசாளர் சி.ஸ்ரீீரஞ்சன், பூநகரிப் பிரதேச சபையின் செயலாளர் இ.தயாபரன், பூநகரிப் பிரதேச சபையின் நூலகர் செ.செல்வக்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களின் எதிர்காலச் செயற்பாடுகள் தொடர்பான ஆலோசனைகளுடன் வாழ்த்துரைகளை வழங்கினர்.


















