மொனராகலை – தணமல்வில – வெல்லவாய வீதியில் 288 ஆவது மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக தணமல்வில பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தணமல்வில பகுதியிலிருந்து வெல்லவாய நோக்கிப் பயணித்த வான் ஒன்று வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரத்தின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தணமல்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் உயிரிழந்தவர் தம்புள்ளை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவர் ஆவார்.
வானின் சாரதி உறங்கியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தணமல்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

















