-லோன்லி பிளனெட் பரிந்துரை-
இலங்கையின் 13 கடற்கரைகள் ஆசிய பிராந்தியத்தின் மிகச்சிறந்த கடற்கரைத்தலங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.
உலகின் முன்னணி சுற்றுலா வழிகாட்டியான லோன்லி பிளனெட் இந்த பட்டியலை வெளியிட்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான சுற்றுலாப் பயணிகளால் நம்பப்படும் லோன்லி பிளனெட் நிறுவனத்தின் இந்த அங்கீகாரம், இலங்கையின் சுற்றுலாத் துறைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய உந்துசக்தியாகக் கருதப்படுகிறது.
1340 கிலோமீற்றர் நீளமான கடற்கரையோரத்தைக் கொண்டுள்ள இலங்கை, ஆண்டு முழுவதும் சூரிய ஒளி, அலைச்சறுக்கு வசதிகள் மற்றும் கடல்சார் உயிரினங்களின் வாழ்விடங்கள் எனப் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது.
லோன்லி பிளனெட் பரிந்துரைக்கும் இலங்கையின் சிறந்த 13 கடற்கரைகள் வருமாறு:
உனவடுன, தலவெல்ல, வெலிகம, கபலன, மிரிஸ்ஸ, ஹிரிகெட்டிய, பெந்தொட்ட, கல்குடா, அறுகம்பே, நிலாவெளி, கசூரினா, கற்பிட்டி, மாவெல்ல ஆகிய கடற்கரைகள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.


















