உலக உணவு தினம் 2025 ஐ ‘சிறந்த உணவுகளுக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் – கைக்கோர்ப்போம்’ என்ற மையக்கருத்தில் இலங்கை உலக நாடுகளுடன் இணைந்து கொண்டாடுகிறது.
அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பையும், சிறந்த போசாக்கையும் உறுதிப்படுத்த நிறுவன வரம்புகள், துறைகள் மற்றும் தலைமுறைகளைக் கடந்து வலுவான ஒத்துழைப்பு அவசியம் என்ற செய்தி தெளிவாகிறது.
இந்நிலையில், ஒக்டோபர் 16 ஆம் திகதி உலக உணவு தினத்தை முன்னிட்டு இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உணவு மற்றும் விவசாய அமைப்பின்(FAO) பிரதிநிதி விம்லேந்திர ஷரன், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் (IFAD) பணிப்பாளர் ஷெரீனா தபஸ்ஸூம் மற்றும் உலக உணவுத் திட்டத்திற்கான இலங்கைப் பிரதிநிதி மற்றும் பணிப்பாளர் பிலிப் வார்ட் ஆகியோர் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


















