உலக தொலைக்காட்சி தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21 ஆம் திகதி உலகளாவிய அளவில் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபை 1996 ஆம் ஆண்டு இந்தத் தினத்தை அறிவித்தது.
இதற்குக் காரணம், தொலைக்காட்சி என்பது ஒரு சாதாரண மின்னணுக் கண்டுபிடிப்பு அல்ல. அது சமூகத்தின் கண்கள். உலகறிவின் கதவு. மனித உணர்வுகளின் பாலமாக மாறிவிட்டது.
தோற்றத்தில் ஒரு பெட்டி போல தெரிந்தாலும், அதன் உள்ளே நமக்குத் தெரியாத பல கதைகள், உண்மைகள், உணர்ச்சிகள், அரசியல் மாற்றங்கள், அறிவியல் கண்டுபிடிப்புகள் அனைத்தையும் தாங்கிக் கொண்டு நம் மனதில் பதிகிறது.















