வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள கட்டுமுறிவு பிரதேசத்தில் சட்ட விரோதமான உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகளுடன் 4 பேரை விசேட அதிரடிப்படையினர் நேற்று கைது செய்தனர்.
விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலையடுத்து குறித்த பிரதேசத்தில் வாகரை விசேட அதிரடிப்படை முகாமின் பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தினர்.
இதன்போது மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கிகள் 4 மீட்கப்பட்டதுடன் 28, 32, 42, 48 வயதுடைய நான்கு பேரை கைது செய்தனர். இவர்கள் அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் வன விலங்குகளை இறைச்சிக்காக துப்பாக்கியால் வேட்டையாடி வருபவர்கள் எனவும் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


















