நாட்டில் தயாரிக்கப்பட்ட 2 துப்பாக்கிகள் மற்றும் 2 வலம்புரிச் சங்குகளுடன் சந்தேக நபர் ஒருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பலங்கொடை – உடகெலாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் சந்தேக நபரை அம்பலங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
சந்தேக நபர் உடகெலாவ, மீட்டியாகொட பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
அம்பலங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


















