வவுணதீவு – பாவக்கொடிச்சேனை வயல் பகுதியில் உழவு இயந்திரம் ஒன்று கவிழ்;ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாவக்கொடிச்சேனையைச் சேர்ந்த 51 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உழவு இயந்திர சாரதி நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்து பழங்குடியிருப்பு மடு பிரதேசத்திலுள்ள வயல் ஒன்றை உழுது பயன்படுத்துவதற்காக உழவு இயந்திரத்துடன் சென்றுள்ள நிலையில் இரவாகியும் வீடு திரும்பாததால் உழவு இயந்திர சாரதியின் உறவினர்கள் அவரைத் தேடி நேற்று செவ்வாய்க்கிழமை காலையில் வயலுக்கு சென்றபோது உழவு இயந்திரம் கவிழ்;ந்துள்ளதையும் சாரதி சடலமாக கிடப்பதையும் கண்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


















