போதைப் பொருளை ஒழிப்பதாகக் கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்தவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதே போதைப் பொருள் குற்றச்சாட்டு சுமத்தப்படும் நிலையில், அதனை வெளிப்படுத்திய ஊடகத்தை அடக்கி ஒடுக்குவதற்கு பொலிஸார் ஏவப்பட்டுள்ளதாக பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன் கட்சி காரியாலயத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
திருடர்களை கண்டுபித்து தண்டனை பெற்றுக்கொடுக்க அதிகாரத்தை வழங்குமாறு தெரிவித்தே ஜனாதிபதி உள்ளிட்ட மக்கள் விடுதலை முன்னணி ஆட்சிக்கு வத்திருக்கிறது. ஆனால் இதுவரை அவர்கள் எந்த திருடனையும் பிடிக்கவில்லை.
நாட்டுக்குள் போதைப்பொருள் கொண்டுவருவது தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் என்பது மக்கள் முன்னிலேயே ஒப்புவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று நாட்டில் போதைப்பொருள் விநியோகிப்பது. அதனால் தற்போது அரசாங்கத்தின் பால் திரும்பியிருக்கும் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டை தடுப்பதற்கு அரசாங்கம் தற்போது ஊடகங்களை அடக்குவதற்கு முயற்சிக்கிறது.
தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு உரித்தானது என தெரிவிக்கப்படும் காணியில் கஞ்சா செடி வளர்த்துவருவது தொடர்பான தகவல் வெளிவந்ததுடன் அதனை தனியார் ஊடகம் ஒன்று ஒளிபரப்பி இருந்தது. இவ்வாறு ஒளிபரப்பியதற்கு எதிராக பொலின் திணைக்களம் குறிந்த ஊடக நிறுவனத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது.
அதில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான காணியில் கஞ்சா பபிருடுவதாக உறுதிப்படுத்தப்படாத ஒரு விடயத்தை ஒளிபரப்பியதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஆனர்ல் குறித்த ஊடக நிறுவன செய்தி ஒளிபரப்பின்போது சம்வத்துடன் தொடர்புபட்ட பொலிஸ் அதிகாரி தெரிவித்த வாக்குமூலத்தையே ஒளிபரப்பி இருந்தது.
ஆனால் அந்த ஒளிப் பதிவை இலங்கை பொலிசார் வெளிப்படுத்தாமல் மறைத்துள்ளனர் அதனையே குறித்த ஊடகம் வெளிப்படுத்தி இருந்தது. அம்பந்தோட்டையில் ஐஸ் போதைப்பொருளின் மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டபோது பொலிஸார் அதனை முழுமையாக ஒளிப்பதிவு செய்து ஊடங்கங்களுக்கு வெளியிட்டிருந்ததை நாங்கள் கண்டோம்.
அதேபோன்று குறித்த பாராளுமன்ற உறுப்பினர் சுற்றிவளைப்புக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தியதாக பொய் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் பொலிஸாரின் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொளிஸ் அதிகாரி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாலே
அவர் ஆரம்பத்தில் ஒரு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வேறு ஒரு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருத்தார்.
அவ்வாறு இல்லாமல் பொயிஸ் அதிகாரி பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் அவருடன் இருந்த பேருக்கு தனியாக இருந்து தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிமார் தெரிவிப்பதாக இருத்தால், அதனை நம்புவதற்கு இந்த நாட்டு மக்கள் தயாராக இல்லை என்றார்.


















