ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப் பட்டறையொன்றை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தப் பயிற்சிப்பட்டறையானது கொழும்பு – 5, இலக்கம் 96 பேர்னாட்சொய்சா மாவத்தையில் அமைந்துள்ள இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் இம் மாதம் 11 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை இடம்பெறவுள்ளது.
பயிற்சிப் பட்டறையில் ஒருங்கிணையும் ஊடகத்துறை : வாய்ப்புக்களும் சவால்களும் என்ற தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீடத்தின் பீடாதிபதியும், ஊடகக் கற்கைகள் துறைத் தலைவரும் பேராசிரியருமான சி.ரகுராமும், இதழியலில் செயற்கை நுண்ணறிவும் சவால்களும் : கோட்பாட்டு ரீதியான கரிசணைகளும் என்ற தலைப்பில் சட்டத்தரணியும், ஊடக பயிற்றுவிப்பாளருமான பெனிஸ்லஸ் துஷானும், செயற்கை நுண்ணறிவு தொடர்பில் ஊடகவியலாளர் அருண் ஆரோக்கியநாதனும் விளக்கங்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளவுள்ளனர்.

















