நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
அதன்படி, லங்கா டீசல் 22 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 303 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன், லங்கா சுப்பர் டீசல் 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 353 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
அதேநேரம், ஒக்டேன் 92 ரக பெட்ரோல், 24 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 317 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 25 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 365 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.
மண்ணெண்ணெய் 13 ரூபாயால் அதிகரிக்கப்பட்டு 195 ரூபாயாக விற்பனை செய்யப்படவுள்ளது.


















