திடீரென ஏற்பட்ட மின்சார விநியோக தடை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மின் தடை காரணமாக எரிபொருள் விநியோகிக்கும் இயந்திரங்கள் இயங்காமையினால், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்களின் நீண்ட வரிசைகளைக் காணக்கூடியதாக உள்ளது.
இந்த நிலையில், நிலைமையைச் சீர்செய்து, எரிபொருள் விநியோகத்தை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.















