-அவசியம் ஏற்பட்டால் பரிசீலிப்போம் என்கிறார் நளிந்த-
எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாததால், எரிபொருள் விநியோகத்திற்கான ஞசு குறியீட்டை அறிமுகப்படுத்த வேண்டிய அவசியம் உடனடியாக ஏற்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அந்த நேரத்தில் நாடு எதிர்கொண்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக எரிபொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த வேண்டியிருந்ததால், எரிபொருள் விநியோகத்திற்காக ஞசு குறியீடு முன்னதாகவே அறிமுகப்படுத்தப்பட்டது என்றார்.
எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று கூறிய அமைச்சர், நாட்டில் போதுமான அளவு எரிபொருள் இருப்பு இருப்பதாகவும் கூறினார்.
தேவை ஏற்பட்டால், ஞசு குறியீடு முறையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கும் என்றார்.


















