-கட்டுப்படுத்த அரசு முயற்சிக்கவில்லையாம்-
நாட்டில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து சந்தையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் கணிசமாக உயரும் அபாயத்தில் உள்ளது. என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், எரிபொருள் விலை அதிகரிப்பால் இடைத்தரகர்களின் போக்குவரத்துச் செலவுகள் உயர்வடையும்.
இதன் நேரடி விளைவாகச் சந்தையில் அரிசியின் விலை பெருமளவில் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அதேபோன்று மீன்பிடிப் படகுகளுக்கான எரிபொருள் செலவு அதிகரித்துள்ளதால் நுகர்வோர் மீன்களை அதிக விலைக்குக் கொள்வனவு செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படும்.
தற்போதைய அரசின் மீது மக்கள் வைத்திருந்த எதிர்பார்ப்புகள் அனைத்தும் தற்போது சிதைந்து விட்டன. அத்தியாவசியப் பொருள்களின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு அரசு முறையான பொறிமுறையொன்றை உடனடியாக முன்னெடுக்க வேண்டும் என்று மரிக்கார் எம்.பி. வலியுறுத்தினார்.


















