எரிபொருள் விலை உயர்த்தப்பட்ட போதிலும் பஸ் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்பட மாட்டாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் எரிபொருள் விலை உயர்ந்த போதிலும், அது பஸ் கட்டண திருத்தத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என அதன் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிரண்டா தெரிவித்துள்ளார். இதன் காரணமாக தற்போதைய கட்டணங்களே நடைமுறையில் இருக்கும் என்றும் நிலான் மிரண்டா மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


















