உலகின் மிக உயரமான மலைப்பகுதியான எவரெஸ்ட் மலை சரிவுகளில் பனிப்புயல் நிலவி வருகிறது.
இந்த மலைச்சரிவுகளில் வெவ்வேறு நாடுகளை சேர்ந்த மலையேற்ற வீரர்கள் முகாம்களை அமைத்து தங்கியிருந்த நிலையில் இந்த பனிப்புயல் ஏற்பட்டுள்ளது.
இந்தப் பனிப்புயலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிக்கினர். இந்நிலையில் பனிப்புயலில் சிக்கி சீனாவைச் சேர்ந்த 41 வயது மலையேற்ற வீரர் உயிரிழந்தார்.
இதுவரை 137 பேர் மீட்கப்பட்டனர். எவரெஸ்ட் பனிப்புயலில் சிக்கி தவித்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


















