நாட்டில் ஏற்பட்ட டித்வா சூறாவளியினால் பதுளை, கிளன் எல்பின், அலுக்குவத்தை தோட்ட மக்கள் மண்சரிவினால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், நிவாரண உதவிகள் அவர்களை சென்றடையவில்லை.
தங்களுக்கென கொண்டு வரப்படும் நிவாரண பொருட்கள் தங்களுக்கு வந்து சேரவில்லை என மக்கள் கவலையுடன் தெரிவிக்கிறார்கள்.
கிளன் அல்பின் தோட்ட மக்கள் தெரிவிக்கையில்,
165 குடும்பங்கள் இருக்கின்றோம். பலத்த மழை பெய்தமையினால் மண்சரிவு ஏற்பட்டு வீடுகள் மற்றும் வீதிகள் சேதமடைந்துள்ளது. ஆனால், எங்களுக்கு எவ்வித நிவாரண உதவிகளும் வழங்கப்படவில்லை. தோட்ட முகாமைத்துவ அதிகாரி மற்றும் நலன் விரும்பி ஒருவரால் மாத்திரமே வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல இடங்களில் நிவாரணப்பொருட்கள் வழங்கப்படுகிறது. ஆனால் எங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வந்து சேர்வதில்லை. இன்று தான் பாதைகள் சீரமைக்கப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக காலை 8 மணி முதல் 5 மணி வரை நிவாரணப் பொருட்களுக்காக காத்திருந்து ஏமாற்றமடைந்துள்ளோம்.
தயவுசெய்து குழந்தைகளுக்கான பால்மா உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை பெற்று தர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.















