-இ.கலைஅமுதன்-
நோர்வேயைச் சேர்ந்த ஏசட் அமைப்பின் ஏற்பாட்டில் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
யாழ்.மாநகரசபை உறுப்பினர் சண்முகநாதன் பிரதீபன் தலைமையில் முல்லைத்தீவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் முல்லைதீவு மாவட்டத்தை சேர்ந்த 60 குடும்பங்களுக்கு மூன்று இலட்சம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதேவேளை மேலும் தொன்னூறாயிரம் பெறுமதியான 25பொதிகளும் முல்லைத்தீவின் கைவேலி, புதுக்குடியிருப்பு பகுதி மக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டன.


















