மலையக ரயில் மார்க்கத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டமையினால் நேற்று இரவு சேவையில் ஈடுபடவிருந்த தபால் ரயில் உட்பட மேலும் 7 ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் நேற்று ஏற்பட்ட மண்சரிவு காரணமாக நேற்று 7 ரயில் சேவைகளை இரத்து செய்ய ரயில்வே திணைக்களம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதனிடையே, மண்சரிவு காரணமாக கடிகமுவ மற்றும் பலான இடையேயான ரயில் பாதையை அடைவது கடினமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


















