மத்திய ஆபிரிக்கக் குடியரசில் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளுக்காக, இலங்கை விமானப் படையின் 11 ஆவது படைப்பிரிவு இலங்கையிலிருந்து புறப்பட்டுச் சென்றது.
நேற்றுக் காலை அந்தக்குழு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டதாக விமானப்படை தெரிவித்தது.
அதில் இரண்டு பெண் அதிகாரிகள் மற்றும் ஐந்து விமானப்படை வீராங்கனைகள் உட்பட 110 விமானப்படை உறுப்பினர்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, அமைதி காக்கும் பணிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த 10 ஆவது படைப்பிரிவைச் சேர்ந்த 94 விமானப்படை வீரர்கள் நேற்று நாடு திரும்பியுள்ளனர்.
புறப்பட்டுச் சென்ற வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவிக்கவும், நாடு திரும்பிய குழுவினரை வரவேற்கவும் விமானப்படை திட்டமிடல் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் தேஷப்பிரிய சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் வீரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


















