நாட்டின் சில பகுதிகளில் தொடர்ந்து கடும் மழை பெய்து வருவதால் 4 மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு மண்சரிவு தொடர்பில் முன்னெச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இந்த மண்சரிவு முன்னெச்சரிக்கைகள் நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணி முதல் இன்று வெள்ளிக்கிழமை இரவு 10 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு நிலை 2 எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
களுத்துறை : வலல்லாவிட்ட பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனை அண்டிய பகுதிகள்.
மாத்தறை : வெலிப்பிட்டிய பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனை அண்டிய பகுதிகள்.
இதேவேளை, பின்வரும் மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு நிலை 1 (மஞ்சள்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது:
காலி : நாகொடை, எல்பிட்டிய, பத்தேகம, யக்கலமுல்ல பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனை அண்டிய பகுதிகள்.
களுத்துறை : பாலிந்தநுவர, மதுகம பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனை அண்டிய பகுதிகள்.
மாத்தறை : கொட்டபொல பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனை அண்டிய பகுதிகள்.
இரத்தினபுரி : எலபத்த, கலவான, பெல்மதுல்ல பிரதேச செயலகப் பிரிவு மற்றும் அதனை அண்டிய பகுதிகள்.


















