ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தடுப்புக்காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பத்துடன் தொடர்புடையவர் என கண்டறியப்பட்டுள்ளதாக கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு – கிராண்ட்பாஸ் பகுதியில் கடந்த 19 ஆம் திகதி ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் தொடர்பில், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட 7 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் அடிப்படையில் கொழும்பு மத்திய பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்தது.
குறித்த விசாரணைகளின்போது, சந்தேகநபர் 08.11.2024 அன்று மருதானை – நெலும் குளுன் பகுதியில் ஒருவரை துப்பாக்கிச் சூடு நடத்தி பலத்த காயங்களை ஏற்படுத்திய குற்றத்தில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் உஸ்வெட்டகெய்யாவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

















