நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் வேகத்தை அதிகரிக்க வேண்டிய தேவைப்பாடு எமக்கு காணப்படுகின்றன. இன்று, நமது நாடு சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளையும் தாண்டி, அரச வருமானத்தை ஈட்டியுள்ளது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சதவீதமாக அரச வருவாயில் 15 வீதம் ஐக் கொண்டிருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் நிபந்தனையிட்டாலும், இன்று அது 15.9 வீதமாக அதாவது 287 பில்லியன் ரூபா அரச வருவாயை ஈட்டியுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தொழில்முனைவோர், தொழிற்றுறையினர், சேவைகள், நிர்மாணத்துறைகளை வலுப்படுத்த வேண்டியிருப்பதால், IMF விதித்த இலக்கை விட அதிகமாக ஈட்டப்பட்ட மேலதிக 0.9 வீதம் அல்லது 287 பில்லியனை மேற்கூறிய துறைகளை மேம்படுத்துவதற்கு பயன்படுத்துங்கள். ஆரம்ப மீதி கூடிதலாக ஈட்டப்பட்டு விட்டதாக அரசாங்கம் கூறும்போது, அதற்காக ஆரவாரம் செய்பவர்களும் காணப்படுகின்றனர். இவ்வாறு ஆரவாரம் செய்வோருக்கு ஆரம்ப மீதி தொடர்பில் சரியான தெளிவு இல்லை.
IMF இலக்குகளின்படி, ஆரம்ப மீதி 2.3 இல் பேணிச் செல்ல வேண்டும். இருந்த போதிலும் அது இப்போது 3.8 ஆக அதிகரித்து காணப்படுகின்றன. மேலதிகமாக ஈட்டிக் கொண்ட நிதியை நாட்டு மக்களுக்காக முதலீடு செய்யலாம், வரிச் சலுகைகளை வழங்கலாம், வீட்டுவசதிகள் போன்ற கனவை கூட நனவாக்கிக் கொள்ள சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கலாம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


















