மும்பை மராட்டிய மாநிலத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பெற்ற நெகிழ்ச்சிச் சம்பவம் பதிவாகியுள்ளது.
சத்தாரா அரசு மருத்துவமனையிலேயே இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது. காஜல் விகாஸ் என்ற பெண் பிரசவத்திற்காக குறித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்களின் பரிசோதனையில் குறித்த பெண்ணின் வயிற்றில் 4 குழந்தைகள் இருப்பது அவதானிக்கப்பட்டது. அதனை அடுத்து, கர்ப்பிணித் தாய்க்கு உடனே அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவைச் சிகிச்சையில் அவர் 4 குழந்தைகளையும் பிரசவித்தார்.
நான்கு குழந்தைகளில் 3 பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை பிறந்ததுடன் அவர்கள் நால்வரும் நலமுடன் உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பிறப்பது என்பது அரிதிலும் அரிதான செயல் என்றும், 10 லட்சத்தில் இருந்து 5 கோடி பிரசவத்திற்கு ஒருமுறை மட்டுமே இதுபோன்ற பிரசவம் பதிவாகிறது என்றும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.


















