ஓமான் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள திட்டமிட்ட குற்றக் கும்பலை சேர்ந்த மிதிகம சூட்டி என அழைக்கப்படும் பிரபாத் மதுசங்க இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்துவரப்படவுள்ளார்.
பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இவர், சர்வதேச பொலிஸாரால் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், ஓமான் பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
அவரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மூன்று அதிகாரிகள் ஏற்கனவே ஓமானுக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


















